Viral video: அரசு பேருந்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் - பெண் பயணிகள் அலறல் - குடிபோதையில் ரகளை செய்யும் சென்னை காவலரின் வீடியோ வைரல்
🎬 Watch Now: Feature Video
சென்னை: வண்டலூர் முதல் கோயம்பேடு வரை செல்லும் '70v' மாநகர பேருந்தில் காவலர் ஒருவர் குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஓடும் பேருந்தில், காவலர் பயணி ஒருவரை அடிக்க முற்படுகிறார். இதைப் பேருந்து நடத்துநர் தடுத்து காவலரை இருக்கையில் அமைதியாக உட்காரும்படி கூறுகிறார். ஆனால் காவலர் அதை மறுத்து நடத்துநரையும் தாக்கச் செல்கிறார். பேருந்தில் இருந்த சகபயணிகள் இதை வீடியோ பதிவுசெய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் காவலரிடம் விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.