Video:1 மணி நேரம் பெய்த மழையால் தள்ளாடிய சென்னை... - வாகன ஓட்டிகள் அவதி - மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்
🎬 Watch Now: Feature Video

சென்னை அடுத்து பல்லாவரம் ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து பழைய பல்லாவரம் செல்லும் சாலையில் நேற்று இரவு 1 மணி நேரம் பெய்த கன மழைக்கு அப்பகுதி வெள்ளக் காடானது. அதனையடுத்து பல்லாவரம் பழைய சந்தை சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு 2 அடி வரை மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதில் வாகனங்கள், சாலையில் செல்ல முடியாமல் அவதியடைந்தன. வாகன ஓட்டிகள் மழை நீரில் நீந்திச்செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து முன்னெச்சரிக்கையாக மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.