சென்னையில் நடுரோட்டில் பற்றி எரிந்த பைக்! - ஓடிக்கொண்டிருந்த பைக்கில் தீ
🎬 Watch Now: Feature Video
சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த மெக்கானிக் அருண் ராமலிங்கம்(24), பழுதுபார்க்க வந்த பல்சர் ரக பைக்கை ஓட்டிக்கொண்டு சரியாக நேற்று (ஜூன் 1) இரவு 8:15 மணியளவில் அபிராமபுரம் பகுதியில் உள்ள ரெயீன் டிரீ ஹோட்டல் அருகே செல்லுகையில் திடீரென எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து புகை வர ஆரம்பித்துள்ளது. இதனால், சுதாரித்துக்கொண்ட மெக்கானிக் அருண் ராமலிங்கம் பைக்கை ஓரமாக நிறுத்தவே திடீரென பைக்கில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. பின்னர் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு தீயை அணைக்க முற்பட்டும் தீ மளமளவென பரவியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தைவெளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.