44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா; கமல்ஹாசனின் குரலில் தமிழ் பண்பாட்டு நிகழ்த்துக் கலை! - Cheras
🎬 Watch Now: Feature Video
சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஜூலை 28) நடக்கும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசனின் குரல் வளத்தில் கேட்போர் மெய்சிலிர்க்கும் வகையில் சேரர், சோழர், பாண்டியர் பேரரசர்களின் கால பண்டையத் தமிழர்களின் வீரம், கலை, ஆன்மிகம், கல்வியறிவு, கட்டடக்கலை உள்ளிட்டவைகள் முப்பரிமாணக் காட்சிகளின் விளக்கத்துடன் செய்துகாட்டப்பட்டன. இந்த முப்பரிமாண நிகழ்ச்சியில் பண்டைய தமிழ்நாட்டினை திறம்பட தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.