அதிகப் பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்திடுமா? பில்கேட்ஸை வம்புக்கு இழுத்த டிஜிபி சைலேந்திரபாபு... - டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாரின் வாரிசுதாரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமின் தொடக்க விழா நிகழ்வில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, வேலையைப் பணத்திற்காகச் செய்ய வேண்டாம், மன நிறைவோடு செய்ய வேண்டும், அப்போது தான் திருப்தி கிடைக்கும், பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்றால், உலகத்தில் பில்கேட்ஸ் மட்டும் தான் அதிக மகிழ்ச்சியாக இருப்பார். அனைவரும் எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியாகச் செய்யுங்கள். ஒரு காவலருக்கு 25,000 ரூபாய் சம்பளம் என்று நினைக்கக்கூடாது, திருடு போன பொருட்களை மீட்டுக் கொடுக்கும் போது அவர்கள் தெரிவிக்கும் நன்றி மகிழ்ச்சியைத் தரும்" என்று தெரிவித்துள்ளார் .