பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு... அவரது சொந்தத் தொகுதியில் நடந்த நிகழ்வு! - பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோதவாடி குளம்
🎬 Watch Now: Feature Video
முன்னாள் துணை சபாநாயகரும் அதிமுக திருப்பூர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதிமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படுவதும், அந்த செருப்பு அவர் உடன் வந்தவர் தலையில் விழுவதுமாக வீடியோவில் பதிவு ஆகியுள்ளது. பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோதவாடி குளம் என்ற இடத்தில் இன்று (டிச.21) இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அவரது சொந்தத் தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.