நன்மை தரும் 108 விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா - சங்கடஹர சதுர்த்தி விநாயகர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16232574-thumbnail-3x2-dgl-tem.jpg)
திண்டுக்கல்: கோபாலசமுத்திரம் கரையில் 11 அடி உயரத்தில் ஒரே மார்பிலில் ஆன கைலாசநாதர் சிவன் கோயில் மற்றும் நன்மை தரும் 108 விநாயகர் கோயில் ஆகியவற்றிற்கு மஹா கும்பாபிஷேகம் இன்று (ஆக.29) நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், உட்பட பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டது. யாகசாலையிலிருந்து கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு காலை 9:15 மணியளவில் 32 அடி உயர ஸ்ரீ மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர், கைலாசநாதர், 108 விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.