Video:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! - நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க பரிசல் தடை
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து திடீரென 57 ஆயிரம் கனஅடி அதிகரித்தது. இதனால் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நேற்று நீர்வரத்து காலை நிலவரப்படி 32ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனையடுத்து ஒகேனக்கல் வழியாக பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கர்நாடக மாநிலப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து உயர்ந்தும் குறைந்தும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.