ETV Bharat / business

2025-2026 பட்ஜெட் எப்படி இருக்கும்? கருத்துக்கேட்புகளை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்! - UNION BUDGET

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கு முந்தைய பல்வேறு துறை நிபுணர்களின் கருத்துகளை கேட்கும் பணிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - கோப்புப்படம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 12:43 PM IST

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய பணிகளில் முக்கியமானதாக தொழில் மற்றும் பல்வேறு துறை பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்கும் நடைமுறை இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட் நடைமுறை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின் மாற்றப்பட்டது.

பிப்ரவரி கடைசி நாளுக்கு மாற்றாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 2025-2026-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இது அவர் தாக்கல் செய்யும் 8-வது முழு பட்ஜெட் மட்டுமல்லாமல், தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 2-வது முழுமையான பட்ஜெட் ஆகும். 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற ஒற்றை இலக்கை முன் வைத்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்புக்கு முன், தொழில் துறையினர், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை மத்திய நிதியமைச்சர் கேட்டறிவார். அந்த வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறை பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பை டிசம்பர் 6-ந் தேதி தொடங்கினார். இதில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண்துறையில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள், நடுத்தர மற்றும் குறுதொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதித்துறை நிபுணர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து பட்ஜெட் தயாரிப்பின் போது ஆய்வு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

கிட்டதட்ட 1 மாதம் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, நிதித்துறை செயலாளர் துஹிம் பாண்டே, பொருளாதார விவகாரங்களுக்கான துறைக்கான செயலாளர் அஜய் சேத், நிதித்துறை சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜூ மற்றும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, 2025-2026-ம் ஆண்டு பட்ஜெட்டுக்காக பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் www.mygov.in என்ற இணையதளத்தில் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.