டெல்லி: சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் பிராந்தியத்தை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதாக சீன ஊடகங்களை மேற்கோள் காட்டி AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாள எல்லையில் டிங்க்ரி (Dingri) கவுண்ட்டி என்ற பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (China Earthquake Networks Center) தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் அமைப்பான US Geological Survey-யின் தரவுகளின் படி நிலநடுக்கத்தின் தீவிரம் 7.1 ரிக்டர் அளவை எட்டி இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
டிங்க்ரி பகுதியில் சில வீடுகள் இடிந்து உள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் சீன ஊடகங்கள் கூறியுள்ளன. நில நடுக்கத்தின் தீவிரத்தை மதிப்பிடும் வகையில் உள்ளூர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
[📢 Preliminary Info] A estimated magnitude 6.5 earthquake with the depth of 10km took place 84km NNW of Lobuche, Nepal at 01:05:18 UTC (9 minutes ago). Reported by GFZ. #earthquake #earthquakes #Lobuche #Nepal pic.twitter.com/dmtCsfRGZr
— Earthquake Alerts (@QuakeAlerts) January 7, 2025
இமயமலைப் பிராந்தியமான சீனாவின் பகுதியில் உள்ள எவரஸ்ட் சிகர பகுதியில் 62 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நிலநடுக்கம் வழக்கமானது என்றாலும், செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொள்ளாத நிலநடுக்கம் என சீன ஊடகம் குறிப்பிடுகிறது.
நடுங்கிய காத்மாண்டு
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதிகளில் திரண்ட காட்சிகளை AP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
#WATCH | Kathmandu | An earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today: USGS Earthquakes pic.twitter.com/MnRKkH9wuR
— ANI (@ANI) January 7, 2025
நேபாளத்தில் உயர்ந்த சிகரங்களை ஒட்டிய Lobuche உள்ளிட்ட பகுதிகளும் நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்த அதிர்வுகளால் குலுங்கின. நேபாளத்தில் எவரஸ்ட் சிகரத்தை ஒட்டிய பகுதியில் வசிக்கும் அரசு அதிகாரியான ஜெகத் பிரசாத் பூஷல் என்பவர் ஏ.பி. நிறுவனத்திடம் பேசுகையில் "இங்கு அதிர்வு மிக வலிமையாக உணரப்பட்டது, ஆனால் சேதவிவரங்கள் இன்னமும் தெரியவில்லை" என கூறியுள்ளார்.
#WATCH | Earthquake tremors felt in Bihar's Sheohar as an earthquake with a magnitude of 7.1 on the Richter Scale hit 93 km North East of Lobuche, Nepal at 06:35:16 IST today pic.twitter.com/D3LLphpHkU
— ANI (@ANI) January 7, 2025
காத்மாண்டுவில் வசிக்கும் மீரா அதிகாரி என்பவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய போது,"நான் அப்போது தூங்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய படுக்கை குலுங்கியது. எனது குழந்தை படுக்கையை அசைப்பதாக முதலில் நினைத்தேன். முதலில் நான் அசட்டையாக இருந்தேன். ஆனால் ஜன்னல்கள் ஆடியதை அறிந்த போதுதான் நில நடுக்கம் என்பதை உணர்ந்தேன். உடனடியாக என்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு தரைத்தளத்தின் திறந்தவெளியை அடைந்தேன்." என்றார்.
இதையும் படிங்க |
Geological faultline என அழைக்கப்படும் பூகோள ரீதியான சிக்கல் மிகு இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் தரைத்தளத்தின் கீழேஉள்ள அடுக்குகளான இந்திய டெக்டோனிக் அடுக்கு, யூரேசியன் அடுக்கை உரசுகிறது. இன்று இமய மலை உருவாவதற்கும் இதுவே காரணம். இந்த இயற்கை நிகழ்வே இப்பகுதியில் நிலநடுக்கம் அதிகம் உணரப்படுவதற்கும் காரணமாக உள்ளது.
இந்தியாவில் உணரப்பட்ட அதிர்வு
டெல்லி, பீகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய வட மாநிலங்களிலும் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. முதலில், காலை 6:35 மணியளவில் இந்த பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 7:02 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆகவும், காலை 7:07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளன.
EQ of M: 4.3, On: 07/01/2025 09:11:14 IST, Lat: 28.79 N, Long: 87.40 E, Depth: 10 Km, Location: Xizang.
— National Center for Seismology (@NCS_Earthquake) January 7, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/4b07597Dau
தலைநகர் பாட்னாவைத் தவிர, பூர்னியா, மதுபானி, ஷிவ்ஹார், சமஸ்திபூர், முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் சிவான் உள்ளிட்ட பீகாரில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.
நிலநடுக்கத்தை உணர்ந்த பூர்னியாவில் வசிக்கும் ஸ்வேதா தேவி, "காலையில் எழுந்து கணவருக்கு டீ போட்டுக் கொடுத்தேன். அவர் டீயை குடித்துக்கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த டீ கோப்பை குலுங்கியது. இதற்கிடையில் வீட்டில் இருந்த மின்விசிறிகளும் தானாக ஆடத் தொடங்கின. நிலம் அதிர்ந்ததை உணர்ந்தோம். எங்களுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டதை தெளிவாக உணர முடிந்தது," என்றார்.