Thiruvalluvar day: 133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவர் படம்! - திருவள்ளுவர் படம் வரைந்து மாணவன் அசத்தல்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: திருவிழந்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குரூப்-1 போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் பிரபாகரன், ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் இன்று (ஜன.15) திருவள்ளுவர் தினத்தையொட்டி அவர் இயற்றிய திருக்குறளின் 133 அதிகாரங்களை கொண்டு திருவள்ளுவரின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார். சுமார் இரண்டரை மணிநேர உழைப்பில் படத்தை வரைந்த அவருக்கு மயிலாடுதுறை திருக்குறள் பேரவை தலைவர் சிவசங்கரன் மற்றும் பேரவை நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
TAGGED:
Thiruvalluvar day 2022