Video: கொட்டும் மழையில் வாழ்வாதாரத்திற்காக பாட்டிலை சேகரித்துக்கொண்டு சென்ற மூதாட்டி - திருவாரூர் மழை
🎬 Watch Now: Feature Video
திருவாரூர்: நன்னிலம் மற்றும் அதன் சுற்றுக்கிராமப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், நன்னிலம் அருகே திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபந்தல் என்ற பகுதியில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் 65 வயதுடைய மூதாட்டி வயிற்றுப்பிழைப்புக்காக பாட்டில், அட்டை, வீணான காகிதங்கள் போன்றவற்றை ஒரு கோணிப்பையில் வைத்து தள்ளாடியபடி இழுத்துச்செல்லும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.