'மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஆளுநர் தடைக்கல்லாக உள்ளார்' - மாணிக்கம்தாகூர் எம்.பி., - மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஆளுநர் தடைக் கல்லாக உள்ளார் என்று மாணிக்கம்தாகூர் எம்பி கூறினார்
🎬 Watch Now: Feature Video
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் "கலைஞரின் வருமுன் காப்போம்" திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட எம்.பி., மாணிக்கம்தாகூர், 'தமிழ்நாடு ஆளுநரைப் பொறுத்தவரையில் மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே பாலமாக இல்லாமல் தடைக் கல்லாக இருப்பது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்' என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.