Video: ஷாப்பிங் மாலில் தீ விபத்து: துணிக்கடை எரிந்து நாசம்! - ஒடிசா ஷாப்பிங் மாலில் தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
ஒடிசா மாநிலம், புபனேஸ்வர் மார்க்கெட் கட்டடம் பகுதியில் உள்ள பிஎம்சி கேசரி வணிக வளாகத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் நேற்று (ஏப்ரல் 15) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் துணிக்கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.