Viral Video - நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற மருத்துவர் மீது வழக்குப்பதிவு - மருத்துவர் மீது வழக்கு
🎬 Watch Now: Feature Video
ராஜஸ்தான்: ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ரஜ்னீஷ் கால்வா, வீட்டிற்குள் நுழைந்த ஒரு தெரு நாயை தனது காரில் கட்டிவிட்டு சுமார் 5 கி.மீ., காருடன் இழுத்துச் சென்றார். கயிற்றால் கட்டப்பட்ட நாயிற்கு ரத்தம் கொட்டியது. இந்த காட்சியை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அந்த நாயை மீட்டனர். காயமடைந்த நாய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.