திம்பம் சாலையில் ரிலாக்ஸாக சுற்றும் சிறுத்தை வீடியோ
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச் சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்தார். சில நேரத்தில் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.