பவானி ஆற்றில் உற்சாக குளியல் போடும் நீர்க்காகங்கள்! - Cormorants bathing springs in the Bhavani River

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 24, 2019, 8:17 PM IST

ஈரோடு மாவட்ட பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் 96 அடியாக உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர்க்காகங்கள் கூட்டம் கூட்டமாக பவானி ஆற்றில் முகாமிட்டுள்ளன. இந்த நீர்க்காகங்கள் நீரின் மீது பறந்தபடி சென்று நீரில் மூழ்கி இரை தேடும் காட்சி பார்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. நீண்ட நேரம் நீரில் நீந்தும் காகங்கள் அவ்வப்போது ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் மற்றும் அணை முன்புள்ள சிமெண்ட் கற்களின் மீது அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. இந்த நீர்க்காகங்களை பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.