மரத்தை ஏன் வெட்டுகிறார்கள்? பாவம் இல்லையா... மழலையின் வைரல் வீடியோ... - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை சீர்காழி மாரிமுத்து நகரில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவரது வீட்டில் அருகே பராமரிப்புப் பணிக்காக மரத்தை சிலர் வெட்டினர். ஜெகநாதனின் 3 வயது மகள் மயூரி உணவு சாப்பிட்டுக்கொண்டே மரம் வெட்டும் இந்த காட்சியை வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துள்ளார். தினம்தோறும் அந்த மரத்தில் அமர்ந்து செல்லும் பறவைகளையும், மரத்தின் தென்றலையும் உணர்ந்த அந்த சிறுமி மரங்களுக்கும் உயிர் உண்டு என்று மனிதர்கள் மறந்த நிலையில் தனது தந்தையிடம் 'ஏன்பா மரத்தை வெட்டுகிறார்கள்? பாவம் இல்லையா?' என்று மழலை மொழியில் இரக்கத்துடன் கேட்கும் காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.