VIDEO... உத்தரகாண்டில் டிராக்டர் மீது மோதிய லாரி... பதைபதைக்க வைக்கும் காட்சி - எழுபது பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
ருத்ராபூர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தம்சிங் நகரில் உள்ள பாஸ்கர் பகுதியில் வசிக்கும் 70 பக்தர்கள் குருத்வாராவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிச்சா சிதர்கஞ்ச் நெடுஞ்சாலைக்கு அருகே உ.பி-உத்தரகாண்ட் சிர்சா எல்லையில் உள்ள நெடுஞ்சாலையின் நடுவே செல்லும்போது, அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று டிராக்டர் மீது மோதியது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.