பகவதி அம்மனுக்கு கும்பாபிஷேகம் - bhagavathi amman Kumbabishekam in trichy
🎬 Watch Now: Feature Video
திருச்சி: தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காவிரியிலிருந்து நீர் எடுத்து வரப்பட்டு புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா தீபாராதனை காட்டினர். தமிழ் புத்தாண்டு மற்றும் குருப்பெயர்ச்சி நன்னாளில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.