300ஆண்டு பழமையான ரணகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம் - அம்மனுக்கு பூங்கரகம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் அடுத்த கொடைரோடு அருகே காந்தி நகரில் உள்ள சுமார் 300 ஆண்டு பழமையான ரணகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு, தீச்சட்டி , பால்குடம் என நேற்றிக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று , அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது.