மனநோயாளிகளுக்கு மொட்டையடித்து அழகுபடுத்திய தன்னார்வலர்கள் - மனநோயாளிகளுக்கு மொட்டையடித்து அழகு படுத்திய தன்னார்வலர்கள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கூடைப்பந்தாட்ட கழகத் தலைவரும், சமூக ஆர்வலருமான முகமது யூசுப் அன்சாரி, கிழிந்த ஆடையுடன் சுற்றித்திரிந்தவர்களை 'உங்களைத் தேடிவரும் உதவிக் குழு'வின் ஒருங்கிணைப்பாளர் பாஷா மூலம் உணவு, புத்தாடைகள் வழங்க ஏற்பாடுசெய்தார். முன்னதாக அழுக்கேறிய தேகத்துடன், பல ஆண்டுகளாக முடிவெட்டாமல் இருந்த அவர்களுக்கு மொட்டை அடித்தும் தூய்மைப் பணியாளர் மூலம் அவர்களை குளிக்கவைத்து சுத்தம் செய்தனர். அதன்பின் அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ரூரல் டிஎஸ்பி சுகுமாரன், தூய்மைப்பணி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் 14 நபர்களுக்கு புத்தாடைகள், உணவு, தண்ணீர் பாட்டில் பிரட் ஆகியவை வழங்கப்பட்டன.