ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்க் கல்வி செலவு.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை! - TN GOVT SCHOOL STUDENTS

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ்
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: திமுக அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின், நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் கல்விப் பயில செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, "இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் படிக்க செல்கின்ற மாணவர்களுடைய கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்: என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.