பலாப்பழ சீசன் தொடக்கம்: வாகன ஓட்டிகளை விரட்டும் ஒற்றை யானை! - viral video of elephant chasing people at burliar
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியார் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, யானைகள் பழங்களை உண்பதற்காக, அப்பகுதியில் படையெடுத்து வருகின்றன. கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் பழங்குடியினர் குடியிருப்பு அருகே முகாமிட்டிருந்த நிலையில், தற்போது ஒற்றை யானை மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிகிறது.
இந்த யானை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை லாவகமாக மேலிருந்து இறங்கி, அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.