செக்கு எண்ணெய் கூடத்திற்கு தீ வைப்பு: வெளியான சிசிடிவி காட்சிகள்! - செக்கு எண்ணெய் தொழிற்சாலை
🎬 Watch Now: Feature Video
கடலூர் மாவட்டம், கம்மியம்பேட்டை சாலையில் ஆண்டாள் பிரியதர்ஷினி என்பவருக்குச் சொந்தமான செக்கு எண்ணெய் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.
நேற்று (மே.25) செக்கு எண்ணெய் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களை அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். தீயிட்டு கொளுத்தும் காட்சிகள், தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.