சாலையின் நடுவில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் போதை ஆசாமிகள் - வைரல் வீடியோ - Two drunken person
🎬 Watch Now: Feature Video
டிக் டாக் செயலி வாயிலாக பல்வேறு விநோதமான வீடியோக்களை பலரும் பதிவேற்றம் செய்துவருகின்றனர். பொழுதுபோக்கிற்காக இவை பதிவேற்றம் செய்யப்பட்டாலும், சில நேரங்களில் அந்த வீடியோக்கள் பல சர்ச்சைகளையும் கிளப்புகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சற்று அருகாமையில் உள்ள சாலையின் நடுவே அமர்ந்துகொண்டு, இரண்டு பேர் பிரியாணி சாப்பிடுகின்றனர். அவர்கள் இருவரும் பேருந்துகள், கார்கள் என எதையும் பொருட்படுத்தாமல் வாகனங்களுக்கு மத்தியில் இருவரும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது போன்று சாப்பிடுகின்றனர். அவர்களின் நடவடிக்கையை பார்க்கையில் இருவரும் போதையில் இருந்ததாக தெரிகிறது.