ETV Bharat / bharat

கேரளாவில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அன்வர்...காரணம் என்ன? - ANWAR

கேரளாவில் Democratic Movement of Kerala (DMK) என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்த பி.வி.அன்வர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த பி.வி.அன்வர்
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த பி.வி.அன்வர் (X/@pv_anvar)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 5:11 PM IST

திருவனந்தபுரம்: சில மாதங்களுக்கு முன்பு ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த கேரள சட்டமன்ற உறுப்பினர் பி.வி.அன்வர், நிலம்பூர் தொகுதியின் எம்எல்ஏ பதவியை இன்று திடீரென ராஜிநாமா செய்தார். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் இந்த முடிவு எடுத்தார். சபாநாயகர் ஏ.என். ஷம்சரிடம் அன்வர் தனது ராஜிநாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்தார்.

இடது ஜனநாயக முன்னணி மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோருடனான மோதல் போக்கை அடுத்து, குறிப்பாக ஏடிஜிபி எம்.ஆர். அஜித் குமார் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியதை அடுத்து, அன்வர் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய கட்சியில் சேர்ந்ததன் மூலம், அன்வர் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எதிர்கொண்டார், இதனால் அவர் ராஜிநாமா செய்ய முடிவு செய்தார்.

கேரளாவில் நிலம்பூர் தொகுதியில் இருந்து இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டு கடந்த 2021-ல் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர். இவருக்கும் ஏடிஜிபி அஜித்குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. மேலும், முதலமைச்சர் பிரனாயி விஜயனுக்கு எதிராகவும் இவர் செயல்பட்டார். இந்த நிலையில், இடது ஜனநாயக முன்னணியில் இருந்து விலகிய அன்வர், கேரளாவில் Democratic Movement of Kerala (DMK) என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் அவர் அந்த கட்சியை அவர் திரிணாமுல் காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு அக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தது.

இந்த நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் நிலம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார், மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தார். கேரளாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமை மற்றும் உள்ளூர் பிஷப்புகளுடன் கலந்துரையாடிய பின்னரே ராஜிநாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மீது முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் அன்வர் பதிலளித்தார், ரூ.150 கோடி லஞ்சம் வாங்கியதாக, முதலமைச்சர் பினராயி விஜயனின் அரசியல் செயலாளர் பி. சசியின் வழிகாட்டுதலின் பேரிலேயே குற்றச்சாட்டு சுமத்தியதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில் கட்சி என்ன கூறியதோ அதனை தான் செயல்படுத்தியாக தெரிவித்தார். குற்றச்சாட்டுகளின் சுமையை தான் இன்னும் சுமப்பதாகவும், சதீசன் மற்றும் கேரள சமூகத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் அன்வர் ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டமன்றத்தில் தாக்கப்பட்டதை பார்த்த பிறகே, ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பியதாக அவர் விளக்கினார், எம்எல்ஏவாக தன்னை ஆதரித்த இடது முன்னணித் தலைவர்களுக்கும், தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும், கடந்த 5 மாதங்களாக பினராயிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஆதரித்தவர்களுக்கும் அன்வர் நன்றி தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.