வள்ளியூரில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட இருவர்- அதிமுக வேட்பாளரை கேள்வி கேட்டதால் தாக்குதல்! - tirunelveli news in Tamil
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வள்ளியூர் பகுதியில் நேற்றிரவு (மார்ச் 19) பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு நபர், வேட்பாளர் இன்பதுரையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து பேசியுள்ளார். உடனே அங்கிருந்த மற்றொரு நபர் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி, நடுரோட்டில் இருவரும் அடித்த்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Mar 22, 2021, 2:48 PM IST