குண்டேரிப்பள்ளம் இயற்கை அழகை ரசிக்கும் பொதுமக்கள்! - Kunderippallam Dam
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபாநகர் அடர்ந்த வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. 42 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையில் தற்போது 32 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் மலைகளில் பசுமை நிறைந்து காணப்படுகிறது.