பத்து ரூபாய்க்கு பனியன் சட்டை: முண்டியடித்த மக்கள் - துணி கடை
🎬 Watch Now: Feature Video
மதுரை கோ.புதூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் துணிக்கடை ஒன்று, தனது விற்பனையை அதிகரிப்பதற்காக சட்டை, பனியன்கள் என எந்த உடைகளை எடுத்தாலும் ரூ.10 மட்டுமே என அறிவித்திருந்தது. இதனையறிந்த மதுரை மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, ஜவுளிக்கடையில் முண்டியடித்து ஜவுளிகளை அள்ளிச் சென்றனர். ஜவுளி வாங்கச் சென்ற பொதுமக்கள் யாரும் தகுந்த இடைவெளி இன்றி நின்றதுடன், முகக் கவசமும் அணியவில்லை. இதனால் தொற்று ஏற்படும் இடர் ஏற்பட்டுள்ளது.