கோடையில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி - weather news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நத்தம், சின்னாளப்பட்டி, வேடசந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் திடீரென்று வானம் இருண்டு பலத்த காற்று இடியுடன்கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். காற்றுடன்கூடிய மழை பெய்ததால் திண்டுக்கல் சென்னை சில்க்ஸ் அருகிலிருந்த பெரிய புளிய மரம் ஒன்று முறிந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த சீருந்து (டாக்ஸி) மீது விழுந்ததில் காரின் பின்பக்கம் சேதமடைந்தது.