மீண்டும் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்! - school education director kannappan
🎬 Watch Now: Feature Video
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளோடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(ஜன.19) தொடங்கியது. இதனையொட்டி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கினார். பல மாதங்களுக்கு பின் பள்ளிக்கு திரும்பியுள்ள மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் நடிகர் தாமு மாணவிகளிடையே கலந்துரையாடினார்.