பணக்கொள்ளையில் ஈடுபட்டுவரும் மோடி அரசு - சசி தரூர்
🎬 Watch Now: Feature Video
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மோடி அரசு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் மீதான வரியை அதிகப்படுத்தி பணக்கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது, டீசல் விலை உயர்வால் காய்கறிகள், எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியுடன் ஒப்பிடும்போது எரிபொருள் வரி வசூல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. வரி வசூலிக்கும்போது, 96% நிதியை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.