ராமேஸ்வரம் கோயிலில் ரிஷப வாகனத்தில் அருள்பாளித்த அம்மாள் ஐயன்! - இராமேஸ்வரம் கோயில் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிவன் கோயில்களில் சுவாமி-அம்பாள், உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதேபோல் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தகுந்த இடைவெளியின்றி கலந்துகொண்டனர்.