டாஸ்மாக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு - சென்னை மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்தக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். பின்னர் டாஸ்மாக் கடையை மூடிய ஊழியர்கள், மீண்டும் திறந்து விற்பனைசெய்தனர். அதை அறிந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கடையைத் திறக்கக் கூடாது என அறிவுறுத்தினர்.