தீபாவளி பட்டாசு போல் வெடித்த மின்கம்பிகள் - Power cable issue
🎬 Watch Now: Feature Video

கோயம்புத்தூர் மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதி மேற்கு தேவேந்திர வீதியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு மின்கம்பிகளில் இருந்து அதிகமாக தீ பொறிகள் வந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "அடிக்கடி மின்கசிவு ஏற்படுகிறது. இது குறித்து பல முறை மின்சார அலுவலகத்திற்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.