watch: மூன்று தலைமுறையாகத் தொடரும் பழங்கால நாணயம் சேகரிப்பு - நாணயம் சேகரிப்பு
🎬 Watch Now: Feature Video
பொள்ளாச்சி நகர்ப்புற பகுதி கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர்தான் மிருதுளா. இவர் கோவை ரோடு பிகேடி தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பொழுதுபோக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்பது ஆகும். இவரது தாத்தா மற்றும் இவரது தந்தை நாணயங்களை சேகரித்து வருகின்றனர் தற்போது மிருதுளாவும் நாணயம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் சுதந்திர கால நாணயங்கள், பிரிட்டிஷார் கால நாணயம், ரோமன் காலத்து நாணயம், வீர சிவாஜி, அம்பேத்கர், நேரு, மகாத்மா காந்தி, காமராஜர் மற்றும் உலகத் தலைவர்கள் பொறித்த நாணயங்கள், வெளிநாட்டில் பயன்படுத்தக்கூடிய நோட்டுகள் ஆகியவையும் உள்ளன.