டெங்குவை தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - Nilavembu kasayam distributed in Vadasery bus stand
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5112162-thumbnail-3x2-dengue.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதை தடுக்கும் நோக்கில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மனித பாதுகாப்பு கழகம் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மனித பாதுகாப்பு கழக தலைவர் ஜெயமோகன், பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் பெற்று பயனடைந்தனர்.