தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவரும் நாம் தமிழர் வேட்பாளர்!
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவை வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பாத்திமா பர்ஹானா பல்வேறு இடங்களில் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று நன்னிலம், சலிப்பேரி, மாப்பிளைக்குப்பம், கீழ்க்குடி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் குறித்தும், விவசாயிகள் நிலைமைகள் அரசியல் மாற்றங்கள் குறித்தும் விளக்கிக் கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார்.