தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள்! - முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள்
🎬 Watch Now: Feature Video

தூத்துக்குடி: சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக தேசிய பசுமைப்படை மாணவர்கள் தூத்துக்குடியிலுள்ள முத்துநகர் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இந்தப் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், இளம் பருவத்திலேயே மாணவர்களிடையே சுத்தத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
Last Updated : Oct 23, 2019, 3:54 PM IST