கோமுகி அணையிலிருந்து நீர் திறப்பு!
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைஅடிவாரத்தில் அமைந்துள்ள 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். கோமுகி அணையிலிருந்து முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 110 கனஅடி நீரும், அடுத்த 45 நாட்களுக்கு வினாடிக்கு 220 கனஅடி நீரும் திறந்துவிடப்படவுள்ளது. இதனால் 10 ஆயிரத்து 860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் வெள்ள சேதம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.