ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6,500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு! - dharmapuri latest news
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: கர்நாடக மாநிலத்தில் காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 1,306 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 700 கன அடி நீரும் என 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று (ஜூலை.07) ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக இருந்தது. மழையின் காரணமாக தற்போது 3,500 கன அடி நீர்வரத்து உயர்ந்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.