ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக உயர்வு - 36ஆவது நாளாக குளிக்கவும், ஆறாவது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தென்மேற்குப் பருவமழை தொடரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதையடுத்து அங்குள்ள அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுவருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்தும், அதிகரித்தும் வந்தது. ஒகேனக்கல்லுக்கு நேற்று 63 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் 36ஆவது நாளாக குளிக்கவும் ஆறாவது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.