புள்ளி மானை காப்பாற்றி வனத்தில் விட்ட வனத்துறையினர் - கோவை செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பாதையில் வன விலங்குகள் அடிக்கடி தென்படுவது உண்டு. இந்நிலையில் நேற்று (மே 19) மாலை வனப்பகுதியிலிருந்து இரண்டு மாத புள்ளி மான் வெளியே வந்தது.
அப்போது சாலையில் சென்ற ஒரு வாகனம் மோதி புள்ளி மான் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்து உயிருக்கு போராடிய புள்ளி மானுக்கு வாகன ஒட்டிகள் தண்ணீர் கொடுத்து சோதனைச்சாவடியில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து முதலுதவி செய்யப்பட்ட பின்னர், புள்ளி மானை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.