வறண்ட ஓடைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள்! - தண்ணீர் இல்லா ஓடையில் உலா வந்த யானைகள்
🎬 Watch Now: Feature Video
கோவை: மத்துவராயபுரம் அருகே உள்ள வலையன்குட்டை பகுதியில் அமைந்துள்ள ஓடை, மழை இல்லாத காரணத்தினால் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (மே.02) காலை அப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த ஐந்து காட்டு யானைகள் நீர் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பின. காட்டு யானைகள் உலா வந்த இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது