200 அடி உயரத்திற்கு வெளியேறி வீணாகும் குடிதண்ணீர்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலை அருகே, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயிலிருந்து சுமார் 200 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறி வருகிறது. அதிகளவிலான தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து குடிநீர் திட்ட அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தும், அதிகாரிகள் வராததால் குடிதண்ணீர் வீணாகி வருகிறது.