ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக உயர்வு! - Hogenakkal water rises
🎬 Watch Now: Feature Video
கர்நாடகா மாநில அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்ந்ததன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒக்கேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து எட்டாயிரம் கன அடியிலிருந்து 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை 124 அடி கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து 42 ஆயிரத்து 978 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையிலிருந்து ஆயிரத்து 500 கன அடி நீரும், மொத்தம் 44 ஆயிரத்து 428 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளதால் ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.