ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை - Devotees are not allowed
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: கரோனா நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வருகின்ற ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடக் கூடாது, பேருந்துகளில் பயணம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.