கரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தும் பெரம்பலூர் அரசு இசைப் பள்ளி ஆசிரியர் - இசைப்பள்ளி ஆசிரியர்
🎬 Watch Now: Feature Video
உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த அரசு இசைப் பள்ளி ஆசிரியராக இருப்பவர் நடராஜன்.
இவர் தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் கரோனா தடுப்பு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,சமூக இடைவெளி வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் சினிமா பாடலை கொண்டு கரோனா விழிப்புணர்வு பாடல் பாடி அசத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.