முதல் வாக்காளரின் அனுபவம் - கோயம்புத்தூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த வாக்காளர்கள் நமது ஈடிவி பாரத் ஊடகத்துடன் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்துள்ள வியூலா, “முதன்முறையாக வாக்களித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாக்குச்சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி தருவது, முகக்கவசம் அணிவது போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு இந்திய உரிமைகளில் பங்கு உண்டு. அதனை அவர்கள் இழக்கின்றனர். அவர்கள் அவரது வாக்கினை பயன்படுத்த வேண்டும்” என்றார்.